திருவள்ளூர்: பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் மதன். இவர் கடந்த ஆண்டு மருத்துவப் படிப்பிற்காக உக்ரைன் நாட்டிற்கு சென்றிருந்தார். கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஒன்றிய, மாநில அரசுகளின் ஏற்பாட்டில் நேற்று (மார்ச் 6) இரவு உக்ரைனிலிருந்து சிறப்பு விமானம் டெல்லி வந்தது. அதில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் மதனும் வந்தார். இதையடுத்து சொந்த கிராமத்திற்கு திரும்பிய மதனுக்கு, பூண்டி ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா ரமேஷ் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பளித்தனர்.
பின்னர், ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேசிய மதன், "என்னை உயிருடன் கொண்டு வந்து என் பெற்றோரை சந்திக்க வைத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும், திருவள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரனுக்கும், பூண்டி ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா ரமேஷ்க்கும் எனது மனமார்ந்த நன்றி. எனது மருத்துவப் படிப்பு கனவை முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: சென்னை கால்வாயில் குப்பை கொட்டினால் நோட்டீஸ்- துணை மேயர் அதிரடி!