ETV Bharat / state

நாளை முதல் 70 இடங்களில் எந்த தளர்வுகளும் கிடையாது - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

திருவள்ளூர்: தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைந்துள்ளது. நாளை முதல் 70 இடங்களில் எந்த தளர்வுகளும் கிடையாது என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாளை முதல் 70 இடங்களில் எந்த தளர்வுகளும் கிடையாது - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்
நாளை முதல் 70 இடங்களில் எந்த தளர்வுகளும் கிடையாது - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்
author img

By

Published : Jul 31, 2020, 6:00 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 1 முதல் 31 வரை ஊரடங்கு குறித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று வரை 9 ஆயிரத்து 315 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 ஆயிரத்து 937 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்தார்.

தற்போது தமிழ்நாடு அரசு எடுத்துவரும் தீவிர முயற்சியால் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் 20% தற்போது 12 % குறைந்துள்ளது, இதுவரை 64 தொழிற்சாலைகளில் 9 ஆயிரத்து 240 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

நாள்தோறும் 50 முதல் 54 இடங்களில் தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் மருத்துவ முகாம் நடத்தப்படுவதாகவும், 150 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி இருந்த நிலையில் தற்போது 475 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர், 103ஆக இருந்த கட்டுப்பாட்டுப் பகுதிகள் தற்போது 70ஆக குறைந்ததாகவும், அயப்பாக்கம் நெல்லூர்பேட்டை ஆவடி போன்ற 70 கட்டுப்பாட்டு இடங்களில் எந்த தளர்வும் கிடையாது என்றும் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.