திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி குப்பம் கிராமத்தில் எலும்பு, தோல், பொது சிறப்பு மருத்துவ முகாம் அங்கு உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. அதானி அறக்கட்டளை, சென்னை மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த முகாமில் எலும்பு உறுதித் தன்மை குறித்த பரிசோதனை, அதனடிப்படையில் எலும்பு, மூட்டு, இடுப்புகளில் ஏற்படும் வலி, எலும்பு முறிவுகளுக்கான சிகிச்சை, தோல் சார்ந்த வியாதிகள், பொதுநல மருத்துவம் சார்ந்து ரத்த அழுத்தம், சர்க்கரை, இருதய ரத்தக்குழாய் அடைப்பு, நுரையீரல் நோய்கள் உள்ளிட்டவற்றுக்கான பரிசோதனைகளும் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் துறைமுக பாதுகாப்புத் துறை தலைவர் கிருஷ்ணராஜ் பொன்ராஜ், அதானி அறக்கட்டளை திட்ட அலுவலர்கள் நடனசபாபதி, மெய்யப்பன், பீட்சா கார்த்திக், ஹேமந்த் குமார் உள்ளிட்டோரும் சென்னை நேஷனல் மருத்துவமனையின் மருத்துவமனை துணைத் தலைவர் வெங்கடசுப்பு, காட்டுப்பள்ளி குப்பம் கிராம நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த முகாமில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பரிசோதனை, சிகிச்சையை செய்துகொண்டனர்.