ETV Bharat / state

பொதுமக்களுக்கு இலவச கபசுர குடிநீர், முகக்கவசம் - மாணவர்கள் கரோனா விழிப்புணர்வு - nannilam corona precaution

பொது மக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கி மாணவர்கள் கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

பொதுமக்களுக்கு இலவச கபசுர குடிநீர், முக கவசம் -  மாணவர்கள் கரோனா விழிப்புணர்வு

author img

By

Published : May 1, 2021, 6:37 AM IST

நன்னிலம் அருகே உள்ள பேரளத்தில் ஏவி பவர் ஜிம் மற்றும் தற்காப்பு கலை மாணவர்கள் இணைந்து கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

இந்நிகழ்வில் பேரளம் காவல் ஆய்வாளர் மணிமாறன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார்.

மாணவர்கள் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களுக்கு முகக்கவசம் வழங்கியும், பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் கிருமிநாசினி உள்ளிட்டவைகளை வழங்கியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பொதுமக்களுக்கு இலவச கபசுர குடிநீர், முக கவசம் - மாணவர்கள் கரோனா விழிப்புணர்வு

இந்நிகழ்வில் ஏவி ஜிம் மாணவர்கள் மற்றும் தற்காப்பு கலை மாணவ மாணவிகள் மற்றும் குழந்தைகள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'பார்வையிலிருந்து மறைந்தாலும் இதயத்தில் இருப்பார்' - கே.வி. ஆனந்த் மறைவுக்கு மோகன்லால் இரங்கல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.