திருவள்ளூர்: கவரப்பேட்டை காவல் எல்லைக்குட்பட்ட தச்சூர் கூட்ரோடு பகுதியில், அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் தலைமையிலான காவலர்கள், நேற்று (மார்ச் 10) வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த லாரியை கண்டு சந்தேகமடைந்த காவலர்கள், லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில், சுமார் 254 கிலோ கஞ்சா பாக்கெட்கள் இருப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து, லாரியில் இருந்த சௌந்தர பாண்டியன், ஐயர் (55), ஜெயக்குமார் (24), அஜீஸ் முகம்மது (17) என்ற நான்கு பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.