கனமழை காரணமாக தமிழ்நாடு-ஆந்திர எல்லையோர பகுதியான நகரி அம்மபள்ளி அணை முழுமையாக நிரம்பியது. இதனையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக அம்மபள்ளி அணை திறக்கப்பட்டது.
இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று (ஆகஸ்ட் 2) இரவு 10 மணி முதல் நாளை காலை 4 மணி வரை ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள அம்மபள்ளி அணையிலிருந்து 600 கனஅடி நீர் திறக்கப்படவுள்ளது. இந்தத் தண்ணீர் நாளை மாலை, நல்லாத்தூர் அணையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் உள்ள பூண்டி நீர்த்தேக்கம் வரை செல்லவதால், அங்கு கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.
கொசஸ்தலை ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் அங்கு பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆற்றில் இறங்கவோ வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அம்மபள்ளி அணையிலிருந்து நீர் திறப்பு!