திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்தலை ஆறு, திருத்தணி, பள்ளிப்பட்டு வட்டங்களை சேர்ந்த கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இன்று (20.10.2020) இரவு 9.00.மணி முதல் (21.10.2020 ) காலை 4.00 மணி வரை ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையிலிருந்து 300 கன அடி நீர் திறக்கப்படவுள்ளது.
அதன்பிறகு அங்கு தொடர் மழையின் இருப்பின் இந்த தண்ணீர் அளவு உயர்த்த வாய்ப்புள்ளது. இந்தத் தண்ணீர் நள்ளிரவில் பள்ளிபட்டு பாலத்தை கடக்கும்.
நாளை (அக்.21) காலை அருங்குளம் அணை வரை வரும் என எதிர்ப்பார்க்கப்படுவதால், அக்கரையோர பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்கப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.
கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! - கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
திருவள்ளூர்: கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.