திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரியிலிருந்து இன்று மாலை 3 மணிக்கு மேல் முதற்கட்டமாக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. மேலும் ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்துக்கேற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புழல் ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீரானது சுற்றியுள்ள கிராமங்களான நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட் லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம் வழியாகச் செல்லும்.
எனவே மாவட்ட ஆட்சியர் பொன்னையா கரையோரம், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கைவிடுத்துள்ளார்.