திருவள்ளூர்: புழல் அருகே ஜவுளி குடோனில் 15 லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டுப்புடவைகளை திருடிச் சென்ற ஐந்து நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் புழல் அடுத்த லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவர் அதே பகுதியில் ஜவுளி குடோன் வைத்துள்ளார்.
ஆகஸ்ட் 18 ஆம் தேதி குடோனிற்கு வந்த அவருக்கு சுமார் 15 லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டுப்புடவைகள் திருடப்பட்டுள்ளது தெரிய வந்தது.
இது குறித்து புழல் காவல் நிலையத்தில் பிரபு புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று (ஆக.26) திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட விக்னேஷ், சந்திரசேகர், அருண்குமார், தாம்சன், சக்திவேல் ஆகிய ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்த 331 பட்டுப்புடவைகளை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: கண் இமைக்கும் நேரத்தில் ராயல் என்ஃபீல்ட் வாகனம் திருட்டு - வெளியான சிசிடிவி வீடியோ