திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த புதுவாயில் பகுதியில் இயங்கிவரும் அமேசான் நிறுவனத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பொன்னேரி பகுதியைச் சேர்ந்த பவித்ரன், சூர்யா, கிஷோர், தினேஷ், காவியா என்ற பெண் உள்பட ஐந்து பேர் பணிபுரிந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், அவர்கள் பணிபுரிந்தபோது திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு ஆரணி காவல் நிலையத்தில், நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் ஐந்து பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த ஆரணி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது தாங்கள் திரட்டிய சில பொருள்களை காவல்துறையினரிடம் அவர்கள் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், அவர்கள் ஐந்து பேர் மீதும் ஆரணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க:கோயில் பிரசாதத்தை ஆன்லைனில் விற்ற அமேசான் மீது வழக்கு