சென்னை அயோத்தி குப்பத்தைச் சேர்ந்தவர் மீனவர் மணிமாறன் (45). இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த வைரவன் குப்பம் கிராமத்தில் வசிக்கும் தனது அண்ணன் முருகன் என்பவரது வீட்டில் தங்கி மீன்பிடி தொழில் செய்துவருகிறார்.
இந்நிலையில் நேற்றிரவு அதே பகுதியைச் சேர்ந்த ராஜா, கஜேந்திரன், ரமேஷ் ஆகிய மீனவர்களுடன் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றார்.
இன்று (பிப். 3) அதிகாலை மீன்பிடித்துவிட்டு முகத்துவாரம் அருகே படகு வந்தபோது பெரிய அலைகளில் சிக்கி படகு நிலைதடுமாறியது. இதனால், படகிலிருந்த மணிமாறன், ராஜா, ராஜேந்திரன், ரமேஷ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு கடலில் தத்தளித்தனர்.
இதனைக் கண்ட அருகிலிருந்த மீனவர்கள் விரைந்துசெயல்பட்டு ராஜா, ராஜேந்திரன், ரமேஷ் ஆகியோரை காப்பாற்றினர்.
ஆனால், மணிமாறன் மட்டும் கிடைக்கவில்லை. இது குறித்து, திருப்பாலைவனம் காவல் துறை, வருவாய்த் துறை, மீன்வளத் துறையினருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். மேலும், அப்பகுதி மீனவர்கள் படகுகள் மூலம் மணிமாறனைத் தேடும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை: ராமேஸ்வரம் மீன்வளத் துறை அறிவிப்பு