திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு லைட் ஹவுஸ் ஊராட்சி நடுக்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவர் சக மீனவர்களுடன் மீன் பிடித்து விட்டு கரையில் வந்து மீன்களை படகிலிருந்து மார்க்கெட் கொண்டுசெல்ல இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது மீன்களை ஏற்றுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த மீன் லாரி ஒன்று திடீரென படகின் மீது வேகமாக மோதியது.
அந்த லாரியில் சிக்கி ஜெய்சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பணி செய்துகொண்டிருந்த மற்றொரு மீனவர் அருள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
இது குறித்து மீன்வளத் துறை அலுவலர்கள், திருப்பாலைவனம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். அவரது உடலை மீட்ட காவல் துறையினர், உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.