ETV Bharat / state

பழவேற்காடு முகத்துவாரத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஆய்வு

author img

By

Published : Jul 8, 2021, 8:41 AM IST

பழவேற்காடு ஏரியில் நிரந்தர முகத்துவாரம் அமையவிருக்கும் பகுதியில் மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

பழவேற்காடு முகத்துவாரத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஆய்வு

திருவள்ளூர்: பொன்னேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக கட்டுப்பாட்டில் அமைந்துள்ள பழவேற்காடு சரகத்தில், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பழவேற்காடு ஏரி சுமார் 760 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது.

இந்த ஏரியை வாழ்வாதாரமாக கொண்டு பழவேற்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள 54 மீனவ கிராமங்களில் எட்டாயிரம் மீனவர்கள் முழுநேரமாகவோ பகுதி நேரமாகவோ மீன்பிடி தொழில் செய்துவருகின்றனர்.

இந்நிலையில், பருவகால மாற்றம், கடல் அலை சீற்றம் ஆகியவற்றால் மணல் திட்டுக்கள் உருவாகி அடைப்பு ஏற்படுகிறது. இதனால் அவர்கள் மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பழவேற்காடு முகத்துவாரத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஆய்வு

பழவேற்காடு ஏரியில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க ஏற்கனவே தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அதைத்தொடர்ந்து மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று (ஜூலை 7) ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "பழவேற்காடு ஏரியில் நிரந்தர முகத்துவாரம் அமைக்கும் பணிக்காக 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசாணையின் படி ரூ.28.5 கோடி செலவில் தூர்வாரும் பணி நடைபெறும். தொடர்ந்து மீனவ மக்களின் படகுகளுக்கு டீசல் மானியம் கூடுதலாக வழங்கப்படும். சட்டசபையில் இதுகுறித்து பேசி சரியான தீர்வு காணப்படும்" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.