சென்னை செங்குன்றம் அடுத்த பாலவாயல் தர்காஸ் சாலையில் தனியாருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி செய்யும் குடோன் ஒன்று உள்ளது. சென்னை பட்டாளம் பகுதியைச் சேர்ந்த தீபக் என்பவர் கடந்த எட்டு மாதங்களாக இந்த பழைய பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி குடோனில் மறுசுழற்சி செய்து தலைநகர் டெல்லிக்கு ஏற்றுமதி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை நான்கரை மணியளவில் குடோனில் இருந்து தீப்பிழம்பு தெரியவரவே அக்கம்பக்கத்தினர் செங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் தீயை அணைக்க முயற்சித்தினர்.
ஆனால் எதுவும் பலன் அளிக்காததால் மாதவரம், மணலி, அம்பத்தூர், செம்பியம், அத்திப்பட்டு, வட சென்னை அனல்மின் நிலையம் ஸ்டேஜ் 2 கோயம்பேடு, ஆவடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 7 தீயணைப்பு வாகனங்கள் வரழைக்கப்பட்டன. சுமார் மூன்று மணி நேரம் போராடிய பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீ விபத்தால் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் கருகி நாசாகின. இது குறித்து வழக்குப்பதிவு செய்த செங்குன்றம் காவல் துறையினர் தீ விபத்து ஏற்பட மின்கசிவுதான் காரணமாக அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க:கிருஷ்ணகிரியில் முதல் கரோனா தொற்று!