திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் பொன்னேரி வட்டார விவசாயிகள் நல சங்க மாநில தலைவர் சின்னசாமி தலைமையில் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி அரசியல் கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது.
பழைய பேருந்து நிலையம் முதல் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்ற விவசாயிகள், நிவர், புரவி புயல்களால் பாதிக்கப்பட்ட பொன்னேரி வட்டார அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கக்கோரியும்,தொடர் மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிர்கள் நிவாரணம் வழங்கக்கோரினர்.
மேலும், பயிர் கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்ய கோரியும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வழங்கப்படும் விவசாய கடன்களுக்கு வட்டி விகிதத்தை பழைய முறைப்படி வழங்கக் வேண்டும் உள்ளிட்ட பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனுவினை பரிசீலனை செய்து மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர்.
இதையும் படிங்க: தமிழ் பெயர்ப்பலகை சேதம்: வாட்டாள் நாகராஜை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்