ETV Bharat / state

"இது என் கட்சி நீ வெளியே போ" சீமான் கூட்டத்தில் தள்ளு முள்ளு? நிர்வாகிகள் பகிரங்க குற்றச்சாட்டு! - SEEMAN

நெல்லை நடைபெற்ற நாதக நிர்வாகிகள் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும், சீமான் ஒருமையில் பேசியதாகவும் நிர்வாகிகள் பகிரங்க குற்றச்சாட்டியுள்ளனர்.

நிர்வாகிகள் மற்றும் சீமான்
நிர்வாகிகள் மற்றும் சீமான் (Photo Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2024, 11:01 PM IST

திருநெல்வேலி: நெல்லை கேடிசி நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சத்யா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் நிர்வாகிகளுடன் பேசப்பட்டது. அப்போது நிர்வாகிகளுக்குள் வாக்குவாதமும் கைகலப்பும் நடந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆலோசனைக்கூட்டத்திலிருந்து வெளியேறிய நாதக நிர்வாகிகள் கூறியதாவது, "எங்களிடம் இருந்து செல்போன்கள் பவுன்சர்கள் மூலம் வாங்கி வைக்கப்பட்டது.

கூட்டத்தில் சீமான் பேசி முடித்தவுடன், மாவட்ட ரீதியான பல்வேறு பிரச்சனைகள் குறித்து கருத்து சொல்ல முன் வந்த மத்திய மாவட்ட இளைஞர் பாசறை பொறுப்பாளர் பர்வீனை கருத்து சொல்ல விடாமல் சீமான் தடுத்தார். தொடர்ந்து கருத்துச் சொல்ல முற்பட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய சீமான், 'கருத்துச் சொல்ல அனுமதி கிடையாது இஷ்டம் இருந்தால் கூட்டத்தில் இரு இல்லையென்றால் வெளியேறு' என சொல்லி விட்டார். இதனைத் தொடர்ந்து அவர் கூட்டத்திலிருந்து இளைஞர் பாசறை பொறுப்பாளர் பர்வின் வெளியேறிவிட்டார்.

அவரை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் தனது கருத்தைப் பதிவு செய்ய முயன்ற போது சீமான் தங்களது கருத்துக்கு பதிலளிக்கும் போது நீங்கள் எல்லாம் சாதிய ரீதியாக செயல்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.இதனையடுத்து கூட்டத்தில் பேசிய நாங்குநேரி பொறுப்பாளர், "இது போன்று யாரும் செயல்படவில்லை நிர்வாகிகள் கட்டமைப்பு தொடர்பாக பேச வேண்டி உள்ளது என சொல்லி உள்ளார்.

இதையும் படிங்க: கருணாநிதி குறித்து அவதூறு பேச்சு: சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

மேலும் சாதிய ரீதியாக நாங்கள் பேசுவதாக தெரிவிக்கும் நீங்கள், சாட்டை துரைமுருகன் சாதி தொடர்பாக பேசும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என என கூறினார். அதற்கு இஷ்டம் இருந்தால் வெளியேறு என சீமான் தெரிவித்த நிலையில், சட்டை துரைமுருகன் நாங்குநேரி பொறுப்பாளரை தாக்குதல் நடத்த முயன்றார் என நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து நாங்குநேரி பொறுப்பாளர் உட்பட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் குண்டர்களால் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டோம்.

நெல்லை மாவட்ட கட்சி நிர்வாகிகளை நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் தாக்க முயன்ற சம்பவத்தை சீமான் கண்டிக்காதது வேதனை அளிக்கிறது. நாம் தமிழர் கட்சி சீமான் கட்டுப்பாட்டில் இல்லை சாட்டை துரைமுருகன் வசம் தான் உள்ளது. கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த 50-க்கும் மேற்பட்டோரிடம் ஆலோசனை செய்து ஓரிரு நாட்களில் எங்களது அடுத்த கட்ட முடிவை அறிவிப்போம்" என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.