டெல்டா மாவட்டம் முழுவதும் 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயல் காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் 2018 -19ஆம் ஆண்டிற்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை 200-க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆங்காங்கே பல்வேறு கட்சிகள், விவசாயிகள் ஆர்ப்பாட்டம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் விளமல் பகுதியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம்வரை பேரணியாகச் சென்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுதல், அரசு அலுவலக வாயில் கதவுகளை சேதப்படுத்துதல் உள்ளிட்ட இரு பிரிவுகளில் தாலுகா காவல் துறையினர் விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: தண்ணீர் இல்லாமல் வயல்கள் வெடிப்பு: 50 ஏக்கர் விவசாயம் கருகும் அபாயம்