ETV Bharat / state

தச்சூர்-சித்தூர் 6 வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு!

author img

By

Published : Apr 26, 2022, 7:35 PM IST

தச்சூர் முதல் சித்தூர் வரை அமைக்கப்பட உள்ள ஆறு வழிச்சாலை திட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தச்சூர்-சித்தூர் 6 வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ஆறு வழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைகள் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆறு வழிச்சாலை அமைக்க ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட தாலுகாக்களில் ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும்.

முப்போகம் விளையக் கூடிய நிலங்கள் இவ்வழியே உள்ள நிலையில், வேறு பாதையில் சாலை அமைக்க வேண்டும் எனக் கோரி விவசாயிகள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்தநிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று (ஏப்ரல் 26) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் சங்கம், மாநில பொதுச் செயலாளர் சண்முகம் கூறுகையில், " தச்சூர் முதல் சித்தூர் வரை ஆறு வழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைகள் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆறு வழிச்சாலை அமைக்க ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு பகுதிகளில் முப்போகம் விளையக் கூடிய விளைநிலங்கள் கையகப்படுத்தப்படும்.

சாலை அமைக்க திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 1300 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. விளைநிலங்களில் சாலை அமைக்க கூடாது. வேறு பாதையில் சாலை அமைக்க வேண்டும்.

இது குறித்து கருத்து கேட்பு நடத்தப்பட்டது. ஆனாலும் கருத்துகளை ஏற்காமல் சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைகள் துறையுடன் சேர்ந்து மாவட்ட நிர்வாகமும் தொடங்கியிருக்கிறது. இந்த செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

நிலம் கையகப்படுத்த காவல்துறையினர் வைத்து விவசாயிகளை மிரட்ட கூடாது, விவசாயிகளை மிரட்டும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்டவைகளும் கூட்டத்தில் பேசப்பட்டது. ஆறு வழிச்சாலையை விவசாய நிலங்களில் அமைக்க கூடாது, மாற்று பாதையில் அமைக்க வேண்டும்" என்று கூறினார்.

மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: வேதாரண்யம் வெள்ளப் பள்ளத்தில் ரூ.100 கோடியில் மீன்பிடித் துறைமுகம்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.