திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்து மப்பேடு அருகே உள்ள தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அருகிலுள்ள வனப்பகுதியில் விடப்படுகிறது.
இதனால் ஆங்காங்கே தேங்கி நிற்கும் கழிவுநீரை அருகிலிருக்கும் கிராமங்களில் வளர்க்கப்படும் கால்நடைகள் குடித்து விடுகின்றன. இதனால் மாதத்திற்கு இரண்டு கால்நடைகள் பரிதாபமாக உயிரிழந்துவிடுகின்றன.
மேலும் காந்திப்பேட்டை பகுதியில் அமைந்த தனியார் துணி தயாரிக்கும் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவு நீரால் நிலத்தடி நீரும் மண்வளமும் பாதிக்கப்படுவதுடன் வனப்பகுதியில் உள்ள குட்டைகளில் கலந்துவிடுகிறது. இந்த கழிவுநீரை அருந்தும் கால்நடைகளும் கடந்த மாதங்களில் அடுத்தடுத்து உயிரிழந்தன.
இன்றும்கூட கழிவு நீரை அருந்திய நான்கு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன என அப்பகுதிமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.