ETV Bharat / state

காவலரின் குடும்பத்திற்கு உதவிய திருவள்ளூர் மாவட்ட காவலர்கள்! - திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அரவிந்தன் உதவி

மதுராந்தகம் அருகே நடந்த வாகன விபத்தில் படுகாயடைந்து சிகிச்சை பெற்று வரும் பெண் காவலரின் கணவன், குழந்தைக்கு உதவும் வகையில் திருவள்ளூர் மாவட்ட காவலர்கள் ரூ. 3 லட்சத்து 39 ஆயிரத்து 300 ரூபாய் வழங்கினார்கள்.

திருவள்ளூர் மாவட்ட காவலர்கள்
திருவள்ளூர் மாவட்ட காவலர்கள்
author img

By

Published : Jan 22, 2022, 11:03 PM IST

திருவள்ளூர்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் உட்கோட்டம் மதுராந்தகம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் ரேணுகா. இவரின் கணவர் ராஜசேகரன், அவர்களுடைய 7 வயது மகள் அரசி ஆகிய இருவரும் கடந்த 14.01.2022 ஆம் தேதி திண்டிவனத்தில் இருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் ஆர்டிஓ அலுவலகம் அருகே நடந்த வாகன விபத்தில் பலத்த காயமடைந்தனர்.

அவர்களது மகள் அரசி சென்னை கிண்டியில் உள்ள ரெயின்போ தனியார் மருத்துவமனையிலும், கணவர் மற்றொரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தையின் நிலைமை மிகுந்த கவலைக்கிடமாகி குழந்தையின் சிகிச்சைக்கு குறைந்தபட்சம் ரூபாய் 10 லட்சத்திற்கு மேல் தேவைப்படுவதாகவும், இந்தத் தொகையினை செலுத்தும் அளவிற்கு பெண் காவலரின் குடும்ப சூழ்நிலை இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.

சிகிச்சைக்கு உதவிய திருவள்ளூர் காவல்துறையினர்

இதையறிந்த திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், பெண் காவலரின் கணவர், குழந்தையின் சிகிச்சைக்கு உதவும் நோக்கில் இதுகுறித்த செய்தியை திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர் முதல் அலுவலர்கள் வரை அனைவருக்கும் தெரியப்படுத்தினார்.

விருப்பம் உள்ள நபர்கள் தங்களது பங்களிப்பினை அளிக்கக்கோரி கேட்டுக்கொண்டு, முதல் நபராக ரூபாய் 10 ஆயிரம் வழங்கினார்.

இதையடுத்து மாவட்டம் முழுவதிலும் இருந்து காவலர்கள் மற்றும் அலுவலர்களிடமிருந்து ரூ.3 லட்சத்து 39 ஆயிரத்து 300 ரூபாய் பெறப்பட்டது. இந்தத் தொகையை இன்று (ஜன.22) பெண் காவலர் ரேணுகாவிடம் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பாக காவல் உதவி ஆய்வாளர் மாலா, முதல்நிலைக் காவலர்கள் ராமமூர்த்தி, திருவருள் ஆகியோர் நேரில் சென்று வழங்கினர்.

இதையும் படிங்க: தண்ணீர் தரமாட்டோம் என்பது எந்தவிதமான மனிதாபிமானம்- கர்நாடக அரசுக்கு துரைமுருகன் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.