தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு நடத்திவருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். இதில் காவல் துறையினரும் கலந்துகொண்டனர்.
அப்போது துணை ராணுவப் படையினர் கைகளில் துப்பாக்கி ஏந்தியபடி அணிவகுத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கொடி அணிவகுப்புப் பேரணி!