திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர்(65). இவருக்கும் இவரது தங்கை அந்தோணியம்மாள் என்பவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 10.01.2018 அன்று ஏற்பட்ட தகராறில் தங்கை என்றும் பாராமல் தகாத வார்த்தைகளால் பேசியதால் அவரது மகன் பாலாஜி தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரான்சிஸ் சேவியர் தங்கை மகன் பாலாஜி( 17)யை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆவடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து திருவள்ளூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணைக்கு பிறகு இன்று( அக்.15) நீதிபதி செல்வநாதன் தீர்ப்பு வழங்கினார். சொத்து தகராறில் 17 வயது இளைஞர் பாலாஜியை குத்திக்கொலை செய்த பிரான்சிஸ் சேவியருக்கு ஆயுள் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
தங்கை மகனை குத்தி கொலை செய்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை! - முதியவருக்கு ஆயுள் தண்டனை
திருவள்ளூர்: சொத்து தகராறில் தங்கை மகனை குத்தி கொலை செய்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.