ETV Bharat / state

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் - மின் வணிக ஆய்வாளர் கைது!

திருவள்ளூர்: வீட்டு மின் இணைப்புக்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்சார வணிக ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.

triuvallur
triuvallur
author img

By

Published : Feb 23, 2021, 1:51 PM IST

திருவள்ளுர் அடுத்த பூண்டி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் உதவி பொறியாளர் அலுவலகத்தில் மோவூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பர் வீட்டிற்கு மின் இணைப்புக்கு பதிவு செய்துள்ளார்.

அப்போது பூண்டி மின்சார வாரிய வணிக வரி ஆய்வாளர் லோகநாதன் என்பவர், மின் இணைப்பு அளிக்க வேண்டுமென்றால் 5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கேட்டதாக தெரிகிறது.

இது குறித்து சுரேஷ், திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதன் அடிப்படையில், 5 ஆயிரம் ரூபாயை லோகநாதன் பெறும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர், கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டதில் கணக்கில் வராத ரூ. 41,000 பறிமுதல் செய்யப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.