திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் தமிழரசன்(26), டிப்ளமோவரை படித்துவிட்டு மத்தூர் பகுதியில் பவானி மருந்தகம் என்ற பெயரில் போலியாக கிராம மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது சிகிச்சையில் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் சுகாதாரத் துறையினருக்கு புகார் அளித்தனர். அப்புகாரின் பெயரில் சுகாதாரத் துறையினர் மாத்தூர் பகுதிக்குச் சென்று அங்கிருந்த போலி டாக்டர் தமிழரசனை பிடித்து விசாரித்தனர்.
அந்த விசாரணையில் அவர் டிப்ளமோ மட்டும் படித்துவிட்டு பவானி மருந்தகம் என்ற பெயரில் போலியாக மருத்துவம் செய்து வந்தது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத் துறையினர் திருத்தணி காவல் துறைக்கு புகார் அளித்தனர். இந்தப் புகாரை அடுத்து திருத்தணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ததோடு, போலி டாக்டரான தமிழரசனை கைது செய்து, தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்களா?