கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமாக ரேஷன் கார்டுக்கு, ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.
கூட்டத்தைத் தவிர்க்கும் பொருட்டு பயனாளிகளுக்கு முன்கூட்டியே டோக்கன் வழங்கப்பட்டு ஒரு மணி நேரத்துக்கு 15 நபர்கள் வீதம் நியாயவிலை கடைகளுக்கு சென்று ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்திருந்தது.
அரசின் அறிவுறுத்தலை சிறிதும் மதிக்காமல் திருவள்ளூர் வீராணம் தெருவில் இயங்கி வரும் நியாயவிலைகடையில் எந்த விதிமுறையும் கடைப்பிடிக்காமல் கடும் வெயிலில் மக்கள் வரிசையில் நிற்க வைத்து டோக்கன் வழங்கப்பட்டது.
இதனால் கரோனா தொற்று பரவிவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் திகைத்திருந்ததாகவும், இதுபோன்ற சமூக பொறுப்பில்லாமல் நடந்து கொண்ட நியாயவிலைக்கடை ஊழியர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மனமுவந்து கரோனா நிவாரண நிதியளித்த தொடக்கப்பள்ளி மாணவர்கள்