தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு குன்றத்தூர் தேமுதிக சார்பில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டு குன்றத்தூர் திருநாகேஸ்வரம் கோயிலிலிருந்து 108 பால்குடம் மற்றும் அலகு குத்தியவர்களின் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன், ”தேமுதிக தலைமை வாய்ப்பளித்தால் வருகின்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவேன். பேனர் விழுந்து பெண் உயிர் இழந்த சம்பவத்தில் அதிமுகவின் பேனர் விழுந்து உயிர் இழந்ததால்தான் இந்த விஷயம் சர்ச்சையானது. இதே தனியார் பேனர் விழுந்திருந்தால் இவ்வளவு பெரிய சர்ச்சை ஏற்பட்டிருக்காது. இடைத்தேர்தலில் கட்சி தலைமை அனுமதித்தால் போட்டியிடுவேன்” என்றார்.