ETV Bharat / state

திருவள்ளூரில் மக்களின் தேவையை கண்டறிந்து செயல்படுத்த சுகாதார பேரவைக் குழு கூட்டம்! - disease

திருவள்ளூரில் மக்களின் சுகாதார தேவைகளை கண்டறிந்து செயல்படுத்துவதற்காக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக மாவட்ட சுகாதார பேரவைக் குழு கூட்டம் நடைபெற்றது.

சுகாதார பேரவை குழு கூட்டம்
சுகாதார பேரவை குழு கூட்டம்
author img

By

Published : Feb 15, 2023, 3:44 PM IST

திருவள்ளூரில் மக்களின் தேவையை கண்டறிந்து செயல்படுத்த சுகாதார பேரவைக் குழு கூட்டம்!

திருவள்ளூர்: பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள பொதுமக்களின் சுகாதாரத் தேவைகளை ஊராட்சி வாரியாக கண்டறிந்து, மக்கள் பிரதிநிதிகள் மூலம் அக்கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய மாவட்ட அளவிலான குழுக்கள் மூலம் ஆய்வு செய்து, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற நிதி ஆதாரங்களைக் கொண்டு அக்கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதைத்தொடர்ந்து, மீதமுள்ள கோரிக்கைகள் மாவட்ட சுகாதாரப் பேரவையில் தீர்மானம் மூலம் நிறைவேற்றப்படுவதற்காக திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கத்தில் மாவட்ட அளவில் கூடியுள்ள மாவட்ட சுகாதார பேரவைக் குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி துவக்கி வைத்துப் பேசினார்.

தமிழ்நாட்டில் தற்போது நடப்பாண்டில் 16 மாவட்டங்களில் சுகாதாரப்பேரவை நடத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் சுகாதாரப்பேரவைக் குழு கூட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இப்பேரவையின் நோக்கமாவது மக்களின் சுகாதாரத்தேவைகளை பஞ்சாயத்து வாரியாக கண்டறிந்து அதனை செயல்படுத்தும் விதமாக, கடந்த ஆண்டு அக்டோபர் 2022 முதல் 14 வட்டாரங்களிலும் மக்கள் பிரதிநிதிகளின் மூலமாக சுகாதார தேவைகளான கட்டடங்கள், உபகரணங்கள், பணியாளர்கள் குறித்த கோரிக்கைகள் பெறப்பட்டன.

இக்கோரிக்கைகளை மாவட்ட அளவிலான குழுக்கள் மூலம் ஆய்வு செய்து மாவட்ட அளவில் பெறப்படும் சமூக பங்களிப்பு நிதி ஆதாரம் மூலமாகவும், சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற நிதி ஆதாரங்களைக் கொண்டு நிவர்த்தி செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப், பொது சுகாதார இணை இயக்குநர் சதீஷ் ராகவன், தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்ட ஆலோசகர் ஷோபா, திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அரசி ஸ்ரீவத்சன், சுகாதார துணை இயக்குநர்கள் ஜவஹர்லால் (திருவள்ளூர்), செந்தில் (பூந்தமல்லி), லட்சுமிமுரளி(காசநோய்), டி.வசந்தி (தொழுநோய்), சேகர் (சுகாதாரப்பணிகள்), மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: MK Stalin: சேலத்தில் சுற்றுப்பயணம்.. ஓமலூர் தாசில்தார் அலுவலகத்தில் ஆய்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.