ETV Bharat / state

கொத்தடிமைகளாக இருந்தவர்களுக்கு மறுவாழ்வு நிதியளித்த ஆட்சியர்.!

திருவள்ளூர்: தனியார் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேரையும் மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு நிதியை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் இன்று வழங்கினார்.

District collector rescued 13 families who were clustered in brick kilns
கொத்தடிமைகளை மீட்டு மறு வாழ்வளித்த மாவட்ட ஆட்சியர்
author img

By

Published : Feb 6, 2020, 4:39 PM IST

திருவள்ளூரை அடுத்த செங்குன்றம் அருகே இயங்கி வரும் தனியார் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பலர் பணிபுரிந்து வருவதாக புதுடெல்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு சண்முகம் என்பவர் புகார் மனு அளித்திருந்தார்.

இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின்பேரில் வட்டாட்சியர்கள் தமிழ்ச்செல்வன், முருகானந்தம் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று அங்கு கொத்தடிமைகளாக பணிபுரிந்து கொண்டிருந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உள்பட 43 பேரை மீட்டனர்.

பின்பு அவர்களை கோட்டாட்சியர் அலுவலகம் அழைத்து வந்து அங்கு அவர்களுக்கு மறுவாழ்வு நிதி மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்.

பின்னர் இது குறித்து ஆட்சியர் கூறும்போது இதுபோல் தொழிலாளர்களை முன்பணம் கொடுத்து குடும்பத்துடன் அழைத்துவந்து கொத்தடிமைகளாக வைத்திருப்பதாக எங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் அவர்களை மீட்டு அழைத்து வந்துள்ளோம். அங்கு குடும்பத்துடன் மீட்கப்பட்ட சிறுவர்களின் கல்விக்கு உரிய ஏற்பாடு செய்யப்படும்.

அவர்களுக்கான மறுவாழ்வு நிதி 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது என்றும் கொத்தடிமைகளாக வைத்திருந்த செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இனிவரும் காலங்களில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

மஸ்கட்டில் கொத்தடிமையாக இருந்த தமிழ்நாட்டுப் பெண் மீட்பு!

Intro:

05_02_2020

திருவள்ளூர் அருகே தனியார் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேரையும் மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு நிதியை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் இன்று வழங்கினார்.

Body:திருவள்ளூர் அருகே தனியார் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேரையும் மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு நிதியை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் இன்று வழங்கினார்.

திருவள்ளூரை அடுத்த செங்குன்றம் அருகே இயங்கி வரும் தனியார் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக 43 க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருவதாக புதுடெல்லியில் உள்ள தேசிய மனித உரிமை கழகம் சார்பில் சண்முகம் என்பவர் புகார் மனு அளித்திருந்தார் இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின்பேரில் வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர்கள் தமிழ்ச்செல்வன் முருகானந்தம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு கொத்தடிமைகளாக பணிபுரிந்து கொண்டிருந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் சிறுவர்கள் உட்பட 43 பேரை மீட்டு கோட்டாட்சியர் அலுவலகம் அழைத்து வந்தனர் அங்கு அவர்களுக்கு மறுவாழ்வு நிதி மற்றும் சான்றிதழ்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறும்போது இதுபோல் தொழிலாளர்களை முன்பணம் கொடுத்து குடும்பத்துடன் அழைத்துவந்து கொத்தடிமைகளாக வைத்திருப்பதாக எங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் அவர்களை மீட்டு அழைத்து வந்துள்ளோம். அங்கு குடும்பத்துடன் மீட்கப்பட்ட சிறுவர்களின் கல்விக்கு உரிய ஏற்பாடு செய்யப்படும் அவர்களுக்கான மறுவாழ்வு நிதி ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்படுகிறது என்றும் கொத்தடிமைகளாக வைத்திருந்த செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இனிவரும் காலங்களில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பேட்டி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார்

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.