ETV Bharat / state

திமுக எம்எல்ஏ-வின் கல்லூரி மீது நர்சிங் மாணவி புகார் - நடந்தது என்ன?

author img

By

Published : Mar 15, 2022, 1:51 PM IST

திருவள்ளூரில் திமுக எம்எல்ஏ-வின் கல்லூரி நிர்வாகம் சான்றிதழ்கள் தர மறுப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் நர்சிங் மாணவி கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

திமுக எம்எல்ஏ கல்லூரி மீது புகார்
திமுக எம்எல்ஏ கல்லூரி மீது புகார்

திருவள்ளூர்: திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரனுக்கு பாண்டூர் பகுதியில் இந்திரா கல்விக் குழுமத்தில் மருத்துவம், பொறியியல், நர்சிங் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த 20 நாள்களுக்கு முன்பு திமுக எம்எல்ஏ-வின் நர்சிங் கல்லூரியில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவியா என்பவர் முதலாமாண்டு சேர்ந்துள்ளார்.

முதலில் காவியா நர்சிங் படிக்க அரசு கல்லூரியில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் கிடைக்காத பட்சத்தில் திமுக எம்எல்ஏ-வின் நர்சிங் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

திமுக எம்எல்ஏ கல்லூரி மீது புகார்

இந்நிலையில் வருகிற 17 ஆம் தேதி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான அழைப்பு கடிதம் காவியாவுக்கு வந்துள்ளது.

அங்கு செல்வதற்காக மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் கேட்டு திமுக எம்எல்ஏ-வின் நர்சிங் கல்லூரியில் காவியா விண்ணப்பித்துள்ளார்.

பேச வாய்ப்பு கிடைக்கவில்லை

இதையடுத்து மூன்றாண்டுக்கான கல்வி கட்டணம் ரூ.3 லட்சம் செலுத்தினால் மட்டுமே சான்றிதழ்கள் தர முடியும் என்று நர்சிங் கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காவியா திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரனிடம் தெரிவிக்க முயன்றும் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதன் காரணமாக மாணவி காவியா மற்றும் அவரது சகோதரி கல்பனா இன்று (மார்ச். 15) மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தனர்.

இதையும் படிங்க: நாவரசு கொலை வழக்கு - முன்கூட்டியே விடுதலை செய்ய கோரும் ஜான் டேவிட் மனு தள்ளுபடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.