ETV Bharat / state

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை - கார் சர்வீஸ் சென்டர்களுக்கு ரூ.3 லட்சம் அபராதம்!

author img

By

Published : Oct 12, 2019, 11:19 PM IST

திருவள்ளூர்: பூவிருந்தவல்லியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் இரண்டு கார் சர்வீஸ் சென்டருக்கு மூன்று லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆய்வில் ஈடுபட்ட அலுவலர்கள்...!

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவி உயிர் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனை ஒழிக்கும் முயற்சியாக ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் டெங்குக் காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பூவிருந்தவல்லி நகராட்சியில் நகராட்சி ஆணையர் டிட்டோ, சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ் ஆகியோர் வீடுகள், பள்ளிகள், தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செயல்படும் 2 பிரபல கார் சர்வீஸ் சென்டரில் லாவா கொசுப் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து ஒரு சென்டருக்கு ஒரு லட்சம் ரூபாயும், மற்றொரு சென்டருக்கு இரண்டு லட்சம் ரூபாயும் என மொத்தம் மூன்று லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆய்வில் ஈடுபட்ட அலுவலர்கள்...!

மேலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடரும் எனவும்; சுகாதாரமற்ற முறையில் உள்ள வீடுகள் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் நகராட்சி அலுவலர்கள் எச்சரித்தனர்.

இதையும் படிக்க...என் மேல் சுமத்தும் குற்றச்சாட்டு பொய்யானது - பரமேஸ்வரா விளக்கம்!

Intro:சென்னை அருகே பூவிருந்தவல்லி நகராட்சியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையாக லாவா கொசுப் புழு கண்டறியப்பட்ட இரண்டு கார் சர்வீஸ் சென்டருக்கு 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Body:தமிழகத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பரவி உயிர் இழப்புகள் நேர்ந்து வருகிறது. இதனை ஒழிக்கும் முயற்சியாக ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.அந்த வகையில் பூவிருந்தவல்லி நகராட்சியில் நகராட்சி ஆணையர் டிட்டோ,சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ் ஆகியோர் வீடுகள், பள்ளி,தொழிற்சாலைகள் மற்றும் கல்லறையில்
ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செயல்படும் 2 பிரபல கார் சர்வீஸ் சென்டரில் லாவா கொசுப் புழு கண்டறியப்பட்டது.ஒதனை அடுத்து கார் சர்வீஸ் சென்டர்களுக்கு 2 லட்சம் ,1 லட்சம் என மொத்தம் 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதோடு கொசுப் புழுக்கள் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டன.Conclusion:அப்போது சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செயல்படும் 2 பிரபல கார் சர்வீஸ் சென்டரில் லாவா கொசுப் புழு கண்டறியப்பட்டது.ஒதனை அடுத்து கார் சர்வீஸ் சென்டர்களுக்கு 2 லட்சம் ,1 லட்சம் என மொத்தம் 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதோடு கொசுப் புழுக்கள் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டன.மேலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடரும் எனவும் சுகாதாரமற்ற முறையில் உள்ள வீடுகள் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.