திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு குற்றம் சாட்டப்பட்டவரை சந்திக்க வழக்கறிஞர்கள் ஏ.பி. ராஜன், அமரகவி விஜயகுமார் ஆகியோர் சென்றனர். அப்போது காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்து வழக்கறிஞர்களுக்கு அனுமதி தரவில்லை. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும், இதுதொடர்பாக புகார் அளிக்க சென்றபோது பொன்னேரி காவல் கண்காணிப்பாளர் கல்பனா தத், வழக்கறிஞர்களை ஒருமையில் பேசியதாக தெரிகிறது.
இதனைக் கண்டித்து இன்று (டிச.22) பொன்னேரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர்களை ஒருமையில் பேசிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஷட்டரை பூட்டி வழக்கறிஞரை தாக்கிய ஹோட்டல் உரிமையாளர் - வழக்கறிஞர்கள் போராட்டம்