ETV Bharat / state

மீனவர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர்: பழவேற்காடு பாரம்பரிய மீனவர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாரம்பரிய மீனவர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க தமிழக அரசை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Aug 5, 2020, 8:10 AM IST

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாரம்பரிய மீனவர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கவும், தமிழ்நாடு மீன்வளத்துறை, தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆக பெயர் மாற்றவும், அரசின் நலத்திட்டங்கள் தகுதியுள்ள அனைத்து மீனவர்களும் தாமதமின்றி உடனே கிடைக்கவும், நலத்திட்ட உதவிகளை பெற முடியாத ஆயிரக்கணக்கான மீனவ மக்களை அரசுக்கு எதிராக நிறுத்திய மீன்வளத் துறை இயக்குனர் சேரன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்கள்.

மேலும், 18 வயது நிறைந்த மீனவ சமுதாய ஆண்கள் மற்றும் பெண்களை புதிய மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களாக சேர்க்கவும், சேமிப்பு நிவாரண நிதி, மீன்பிடி தடைக்கால நிவாரணம், மீன்பிடி குறைந்த கால நிவாரணம், நலவாரிய பயன்கள் மற்றும் மானியம் ஆகியவற்றினை தாமதமின்றி உடனே வழங்கவும் வலியுறுத்தி தமிழ்நாடு மீனவர் இயக்கங்களின் ஒருங்கிணைப்பு குழு, தமிழ்நாடு மீனவர் சங்கம், திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய மீனவர் சங்கங்கள் இணைந்து பழவேற்காட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய மீனவ சங்க பொது செயலாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவ சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.