திருவள்ளூர் மாவட்டம் ஏறுசிவன் ஊராட்சியில் கடந்த மூன்று மாதங்களாக ஊராட்சி மன்ற அலுவலகம் பூட்டி கிடப்பதால் ஊராட்சிக்குட்பட்ட 7 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் நேரத்தில் பொதுமக்களிடம் ஓட்டு கேட்டு விட்டு தற்போது பொதுமக்கள் குறைகளை கேட்பதற்கும், தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் ஆளில்லாமல் பூட்டி கிடக்கும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பூட்டு போட்டிருப்பதன் காரணத்தை இதுவரை பொதுமக்களிடம் தெரியப்படுத்தவில்லை எனவும் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளும் பொதுமக்களின் தேவைகளை பொருட்படுத்தாது அவரவர் தேவைக்கு அலுவலகத்தை பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கொசஸ்தலை ஆறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை