திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த அருங்குளம் பகுதியில் உள்ள காப்புக் காட்டில் இருந்து ஆண் புள்ளிமான் அந்த வழியே தண்ணீர் குடிப்பதற்காக கிராமத்திற்குள் வந்தது.
இதை பார்த்ததும் கிராம பொதுமக்கள் திருத்தணி வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனச்சரகர் பாஸ்கர் உத்தரவின்பேரில் வனவர் சுந்தரம், வனக்காப்பாளர் வடமலை ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று புள்ளிமானை மடக்கிப் பிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து வனத் துறையினர் திருவலாங்காடு அருகே வீராபுரம் காட்டில் புள்ளிமானை பாதுகாப்பாக விட்டனர். அந்தக் காட்டில் மான்கள் அதிகமாக உள்ளதாகவும், தண்ணீர் குடிப்பதற்கு வனத் துறை சார்பில் தண்ணீர் தொட்டி ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.