திருச்சி மாவட்டத்தில் 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டான். இதன் எதிரொலியாக செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் பேசியதாவது, 'திருவள்ளூர் மாவட்டத்தில் பயன்பாடு இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை உரிமையாளர்கள் உடனடியாக மூடிவிட வேண்டும். அலுவலர்கள் இதனை கவனிக்காவிட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரை திருவள்ளூரில் 1,100 மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளது. மேலும் ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் இருப்பது குறித்து 24 மணிநேரமும் செயல்படும் வாட்ஸ்ஆப் எண் 94443 - 17862 மற்றும் தொலைபேசி எண் 044_ 27664177 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம்' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆபத்தான ஆழ்துளைக் கிணறுகளை சாக்கினால் கட்டி மூடிய சிறுவர்கள்!