திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோட்டை கரை அரசு மருத்துவமனை மற்றும் செரியன் ஹார்ட் பவுண்டேஷன் ஆகிய மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் படுக்கை வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, எளாவூரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் உள்ள அரசு கட்டிடங்களில் புதிய கரோனா படுக்கை வசதிகள் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சா.மு நாசர் கூறியதாவது, " திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் கரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்