திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் ஊரடங்கு உத்தரவின் காரணமாக திமுகவின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் ஏசுராஜன்-கலைமணி இல்ல திருமண நிகழ்ச்சி மிக எளிமையாகவும், தகுந்த இடைவெளியை பின்பற்றியும் நடைபெற்றது.
திருமண வரவேற்பாக இருவீட்டாருக்கும் முகக்கவசம் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. மணமக்கள் கெசின்-சாருலதா ஆகியோர், திமுக மீஞ்சூர் ஒன்றிய செயலாளர்கள் வல்லூர் என்.எஸ்.கே. ரமேஷ் ராஜ், சுகுமாரன், ஒன்றிய சேர்மன் ரவி ஆகியோர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர்.
மாப்பிள்ளை வீட்டாரின் சார்பில் 10 பேரும், பெண் வீட்டாரின் சார்பில் 10 பேரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மிக பிரமாண்டமான முறையில் நடைபெறவிருந்த திருமண விழா, கரோனா தடுப்பு நடவடிக்கையின் காரணமாக தற்போதைய சூழலில் மிக எளிமையாக நடைபெற்றது.
இதையும் படிங்க: கரோனா: மணமக்கள் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்ட திருமண நிகழ்வு