ETV Bharat / state

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: சிபிஐ ஆர்பாட்டம் - திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: பூவாலை கிராமத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இதற்காக போராடி கைது செய்யப்பட்ட சிபிஐ மாவட்ட துணைச் செயலாளரை விடுதலை செய்யக் கோரியும் சிபிஐ சார்பில் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

cpi protet against those who occupied the govt land in thiruvallur dist

author img

By

Published : Feb 15, 2021, 6:59 PM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பூவாலை கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்ததாக கூறி சிபிஐ கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாவட்ட துணை செயலாளர் ஜெ. அருள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவலர்கள் சிறையில் அடைத்துள்ளனர்.

அதே போல் கிராம மக்கள் மீது காவல் துறையினர் பொய்யான வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் காவல் துறையினரின் நடவடிக்கைகளைக் கண்டித்து திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் சிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில துணை செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சுப்பராயன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நிலத்தை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பதியப்பட்ட பொய் வழக்கினை திரும்பப் பெற வேண்டும், அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர் மீது சிறையில் இருந்து வெளியே வர முடியாத வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் சிபிஐ கட்சி சார்பில் புகார் மனுவும் அளிக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.