திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த தடபெரும்பாக்கம் கவுன்சிலர் பானுமதி ஊரடங்கு உத்தரவால் வீட்டை விட்டு வெளிவர முடியாத சூழ்நிலையில் சிக்கித் தவித்துவரும் பொதுமக்களுக்குத் தொடர்ந்து 18ஆவது நாளாக உணவு அளித்துவருகிறார்.
அரசு அலுவலர்கள் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளைக் கண்டுகொள்ளாத சூழ்நிலையில் அப்பகுதிகளுக்குச் சென்று ஏழை எளிய மக்களுக்கு தினம்தோறும் உணவு வழங்கிவருகிறார் பானுமதி.
அதன்படி, நேற்று பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் கிராமத்தில் பசியால் வாடிவந்த சுமார் 70-க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு பானுமதி உணவுப் பொட்டலங்களை வழங்கினார். இதனால் அவருக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்து இச்செயலைப் பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க... சேலம் அம்மா உணவகங்களில் காலை, மதியம் உணவு இலவசம் - முதலமைச்சர் பழனிசாமி