ETV Bharat / state

தகுந்த இடைவெளி இல்லாமல் நிவாரணம் வழங்கிய அதிமுகவினர் - அதிமுக சார்பில் நிவாரணப் பொருட்கள்

திருவள்ளூர்: அதிமுக சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கிய நிகழ்ச்சியில் தகுந்த இடைவெளியை கடைபிடிக்காமல் பொதுமக்கள் கூட்டமாக அமர்ந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

without social distancing
Corona relief by ADMK
author img

By

Published : Jun 5, 2020, 7:31 PM IST

திருவள்ளூர் மாவட்டம் நேதாஜி சாலை, தேவி மீனாட்சி நகர் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (ஜூன் 4) நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் பலராமன், துணை செயலாளர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு 10 கிலோ அரிசி, காய்கறிகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில், தகுந்த இடைவெளியுடன் பொதுமக்கள் நிற்க வேண்டும் என சுண்ணாம்பு கொண்டு வட்டம் வரையப்பட்டது. ஆனால் அதில் பொதுமக்கள் தகுந்த இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக அமர்ந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: 'சமூகப் பரவலை நோக்கி தமிழ்நாடு செல்கிறது' - இந்திய மருத்துவச் சங்க மாநிலத் தலைவர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.