ETV Bharat / state

திருவள்ளூரில் தீவிரமடையும் கரோனா: பொதுமக்கள் அச்சம் - கரோனா வைரஸ்

திருவள்ளூர்: கரோனா வைரஸ் (தீநுண்மி) கடந்த ஒரு வாரமாக அதிகரித்துவருகிறது. இது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வேண்டுகோள்

author img

By

Published : Apr 10, 2021, 7:20 AM IST

கடந்தாண்டு கரோனா தீநுண்மி தொற்றைத் தடுக்கும் நோக்கத்தில பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. பல்வேறு விதிமுறைகளைப் பின்பற்றவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இதனால் பொதுமக்கள் எங்கும் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டதால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

அதேபோல் இந்த ஆண்டும் கடந்த மார்ச் மாதம் இறுதிமுதல் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. இதற்குக் காரணம் தொற்று தொடர்பான விதிமுறைகளைப் பின்பற்றாததுதான்.

அதன் அடிப்படையில் தொற்று வேகமாகப் பரவிவருவது பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கரோனா தொற்று பாதிப்பு இந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1ஆம் தேதி 158 பேரும், 2ஆம் தேதி 183 பேரும், 3ஆம் தேதி 201 பேரும், 4ஆம் தேதி 153 பேரும், 5ஆம் தேதி 156 பெரும், 6ஆம் தேதி 175 பெரும், 7ஆம் தேதி 208 பேரும், 8ஆம் தேதி 199 பேரும், நேற்று (ஏப். 9) 195 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் இன்றுமுதல் தளர்த்தப்பட்ட விதிமுறைகளுடன் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளான திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அரசு தடைவிதித்துள்ளது. முகக்கவசம், அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும், தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். மேலும் மக்கள் யாரும் அச்சம்கொள்ளத் தேவையில்லை என்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 34 லட்சத்து 87 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.