திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அருகே தனியார் இரும்புக் கம்பிகள் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 250க்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தொழிற்சாலையில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தனியார் மருத்துவமனை மூலமாக கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 19 தொழிலாளர்களுக்கு தொற்று நோய் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, தொற்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மட்டும் விடுமுறை கொடுத்து தொழிற்சாலை நிர்வாகம் வீட்டுக்கு அனுப்பியது. தொற்று பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வீட்டிலேயே தங்கி தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்த தகவல் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
பின்னர் திருநின்றவூர் பேரூராட்சியில் இருந்து விரைந்து வந்த சுகாதார ஊழியர்கள், தொழிற்சாலை முழுவதும் கிருமிநாசினி தெளித்தனர். தொற்றுக்குள்ளான தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் பரிசோதனை மேற்கொள்ள அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தொழிற்சாலை தொடர்ந்து செயல்பட்டு வருவது சக ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ’ஸ்டாலின்தான் வராரு... மக்களெல்லாம் உஷாரு’: பாட்டாகவே பாடிய விந்தியா