திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை நேரில் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ஜெயக்குமார், ’யாருக்கும் டெங்கு இல்லை, இரண்டு மூன்று பேருக்கு மட்டுமே அறிகுறிகள் உள்ளது. யாரும் கவலை கொள்ள வேண்டாம். விரைவில் குணமடைவீர்கள் ’என நோயாளிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்; ’திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவலாக இல்லை. பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம். மாவட்டத்தில் டெங்கு அறிகுறி வெறும் நான்கு பேருக்கு மட்டுமே உள்ளது. தேவையான அனைத்து வசதிகளும் அரசு மருத்துவமனையில் உள்ளது. புற நோயாளிகளாக 46 பேர் சாதாரண காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுகின்றனர்’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : ‘தமிழ்நாட்டில் 3,000 பேருக்கு டெங்கு அறிகுறி’ - பீலா ராஜேஷ்