திருவள்ளூரில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தைத் தூர்வாரும் பணிகளில் தமிழ்நாடு அரசு மோசடி செய்கிறது. நிரந்தரமாக தூர் வாரினால் மட்டுமே தொடர்ந்து மணல் திட்டுக்கள் சேராமல் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். கண்துடைப்புக்காக முகத்துவாரத்தைத் தூர்வாரி வருகிறார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க மாநில அரசு மூலம் பரிந்துரை செய்யப்பட்டு மத்திய அரசு மூலம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
லஞ்ச ஒழிப்புத்துறை, வருமான வரித்துறை மூலம் சோதனை மேற்கொண்டு தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்' என்று தெரிவித்தார்.