திருவள்ளூர் மாவட்டம் நேமம் பகுதியில் உள்ள வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று(மே.26) ஆய்வு செய்தார்.
அதைடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "தடுப்பூசிகள் வாங்க உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதன்படி இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகள் வாங்கப்படும்.
சென்னையில் கரோனா பரவல் படிப்படியாக குறையத் தொடங்கிவிட்டது. வரும் நாள்களில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கின் பலன் வெளிப்படும். அரசுக்கு மக்கள் முழு ஆதரவு அளித்து தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அண்மையில், தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்தது உண்மை. ஆனால் தற்போது சீர் செய்யப்பட்டுவிட்டது. தற்போது அமலில் உள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தேவைப்பட்டால் மீண்டும் நீட்டிக்கப்படும்' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'மூன்று வேளாண் சட்டங்களைகத் திரும்ப பெற வேண்டும்' மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!