திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் தனியார் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் எடப்பாளையம் பகுதியில் பருப்பு கம்பெனியை நடத்திவரும் விஜயலட்சுமி மணவாளன் என்பவர் கணக்கு வைத்துள்ளார். நேற்று முன்தினம் இவர் வங்கியில் உள்ள தமது வங்கி கணக்கில் ஒரு லட்சத்து, 29 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார்.
இந்த பணத்தை வங்கி அலுவலர்கள் சோதனை செய்ததில் இதில் 26 ஆயிரத்து, 800 ரூபாய் கள்ளநோட்டுக்கள் இருப்பது தெரிய வந்தது. 200 ரூபாய் தாள்களில் 134 கள்ளநோட்டுக்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து வங்கியின் மேலாளர் யுவராஜ் வங்கியை ஏமாற்றி கள்ள நோட்டுக்களை செலுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து செங்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.