திருவள்ளூர்: கல்லூரி மாணவி ஒருவர் தோஷம் கழிப்பதற்காக தனது உறவினருடன் பிப்ரவரி 13ஆம் தேதி, சாமியார் முனுசாமியிடம் சென்றுள்ளார்.
இந்நிலையில், பூஜை முடிந்த பிறகு மாணவி வாந்தி எடுத்து மயக்கமடைந்துள்ளார். மயக்கமடைந்த மாணவி தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, நேற்று முன்தினம் (பிப். 16) சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர், மாணவியின் பெற்றோர் மாவட்ட ஆசியரிடம் மனு அளித்து சம்பந்தப்பட்ட சாமியா முனுசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: உறக்கத்தில் மரணம்: உடல் பருமனால் ஆபத்து!