ETV Bharat / state

ரயிலில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே ரயிலில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

author img

By

Published : May 27, 2022, 1:58 PM IST

கல்லூரி மாணவன் ரயிலில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!

திருவள்ளூர்: திருவாலங்காடு அடுத்த ஓரத்தூர் பகுதியைச் சேர்ந்த அடைக்கலம் என்பவரது மகன் நீதிதேவன் (19). இவர் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். இவர் எப்பொழுதும் கல்லூரியை முடித்துவிட்டு ரயிலில் வீட்டிற்கு திரும்பவது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல கல்லூரி முடித்துவிட்டு, நீதிதேவன் ரயிலில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது, வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் தனது கல்லூரி நண்பருடன் நீதிதேவனும் இறங்கியுள்ளனர். பின்னர் இருவரும் ரயிலில் ஏறும்போது, தனது நண்பன் ரயிலில் ஏறி விட்டாரா என்பதை பார்ப்பதற்காக நீதிதேவன் திரும்பிப் பார்த்துள்ளார். அப்பொழுது அவரின் கால் எதிர்பாராத விதமாக ரயிலுக்கு அடியில் சிக்கியது.

இதனால், நீதிதேவன் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர், திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள், மாணவர் நீதிதேவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த துயரச் சம்பவம், அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கல்லூரி மாணவியை காரில் கடத்தி தாலி கட்டிய இளைஞர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.