ETV Bharat / state

நீர்த்தேக்கம் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவு!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவுறுத்தினார்.

Collector ordered to complete reservoir works expeditiously

author img

By

Published : Oct 13, 2020, 7:53 PM IST

திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகையில் உள்ள இரண்டு ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கமாக உருவாக்கி ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் கிருஷ்ணா நீரையும் பருவகாலங்களில் பொழியும் மழை நீரையும் 500 மில்லியன் கன அடி அளவுக்கு இரண்டு முறை ஆயிரம் மில்லியன் கன அடி தண்ணீர் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகர குடிநீர் தேவை மற்றும் பாசனத்துக்காக ரூ.380 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய நீர்த்தேக்கம் பணிகளை திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, நீர்த்தேக்கத்தின் பணிகளை மழைக் காலத்துக்கு முன் விரைந்து முடிக்க பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவுறுத்தினார்.

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், ஆகிய ஏரிகள் உடன் கூடுதலாக நீர்த்தேக்கத்தின் வாயிலாக குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட உள்ளது.

இதையும் படிங்க: 1000 ஏக்கர் பயிர் தண்ணீரின்றி நாசம்: இழப்பீடு கேட்டு விவசாயிகள் மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.