திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சி, கஸ்தூரி நகரில் நடைபெற்ற கரோனா காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, அப்பகுதியில் எத்தனை பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் எத்தனை பேர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளார்கள். அவ்வாறு வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளவர்கள் வீட்டினை சுற்றிலும் தகடு அமைக்கப்பட்டு உள்ளதாக, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளதா என்று ஆய்வு செய்தார்.
பின்னர் அங்குள்ள மருத்துவ முகாமிற்கு சென்று எத்தனை பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவ்வாறு, உள்ள இடங்களில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா என்ற விவரத்தை கேட்டறிந்தார்.
மேலும் அங்குள்ள சுகாதாரப் பணியாளர்களிடம் நாள்தோறும் அனைத்து வீடுகளுக்கும் சென்று சளி, இருமல், தலைவலி, காய்ச்சல் உள்ளதா என்று கண்காணித்து விவரங்களை சேகரிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, பூவிருந்தவல்லி நகராட்சி , பாரதியார் நகரில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாமை ஆய்வு செய்தார்.
தொற்று பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அந்த வீட்டில் உள்ள நபர்கள் வெளியிலும், வெளியிலிருந்து வரும் நபர்கள் வீட்டுக்குள்ளும் செல்லாதவாறு தகரம் அடிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியர் ப்ரீத்தி பார்கவி, அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.